உலக செஸ் சாம்பியன்ஷிப் 3வது சுற்று இன்று துவக்கம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்தும், நார்வேயைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸெனும் மோதுகின்றனர்.

முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில், 2-ஆவது சுற்றில் கார்ல்ஸென் வெற்றி பெற்றார். இதனால் 1.5 புள்ளிகளுடன் கார்ல்ஸென் முன்னிலையில் உள்ளார். இதை தொடர்ந்து இன்று 3-ஆவது சுற்று நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *