மேற்கு ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த நோய் நுழையாமல் தடுக்க அனைத்து நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
இந்த நோயை குணப்படுத்த அதிகார பூர்வமான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த நோய் பரவி விட்டது. எனவே அதை தடுக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. அதற்காக மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முனைப்புடன் உள்ளனர்.
தற்போது ஐரோப்பிய யூனியன் எபோலா நோயை பரவாமல் தடுக்க சுமார் ரூ. 200 கோடியை ஒதுக்கியுள்ளது. மருந்து கண்டு பிடிக்கவும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள `எபோலா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. இப்பணம் விரைவில் அங்கு அனுப்பட உள்ளது. இந்த தகவலை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கமிஷன் அறிவித்துள்ளது.