ஆரணியில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே இழைத்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், காவிரி பிரச்னை குறித்து, வாதம் செய்ய, சட்டசபையில் நேரம் ஒதுக்கலாம். அதில் விவாதித்து, யார் தவறு செய்தார்கள், யார் நியாயமாக நடந்து கொண்டார்கள், யார் நம் உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை, நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் எனக் கூறி இருக்கிறார்.
அவரது சவாலை, நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழக சட்டசபை கூட்டப்பட்டதும், காவிரி நதிநீர் பிரச்னை குறித்து, விவாதிக்க தயாராக இருக்கிறேன். கருணாநிதி துரோகங்களை பட்டியலிட, தயாராக இருக்கிறேன்.என் கட்சி சார்பில், நான்தான் பேசுவேன்.
இதேபோல், கருணாநிதி, சட்டசபை விவாதத்தில், கலந்து கொள்ளத் தயாரா. தி.மு.க., சார்பில், துரைமுருகனோ, வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை, ஏற்றுக் கொள்ள முடியாது. இதை கருணாநிதி ஏற்றுக் கொள்ளத் தயாரா, சட்டசபைக்கு வரத்தயாரா? என்னை நேருக்கு நேர் சந்தித்து, விவாதிக்க தயாரா. இது குறித்த முடிவை, கருணாநிதி அறிவிக்க வேண்டும். இல்லையெனில், ‘துரோகம் இழைக்கப்பட்டது உண்மை தான்’ என, கருணாநிதி ஒப்புக்கொள்கிறார் என்று அர்த்தம். எனக் கூறினார்.