குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி கல்லூர் கிராமத்தில் அரசமர தெருவில் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்தில் இரண்டு பக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடியாத்தம் தொகுதி அமுலு விஜியன் எம் எல் ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி