மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு!!!!

கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டா பேரூராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி ஸ்ரீநகர் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் வந்தடைகின்றனர். தொடர்ந்து வருகின்ற 31ஆம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின விழாவில்
பங்கு இருக்கின்றனர் .

இதனையொட்டி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி சி ஆர் பி எப் பெண் வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர். கடந்த மூன்றாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 25 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 50 பெண் வீரர்கள் பள்ளிகொண்டா வந்தடைந்தனர்.

அவர்களுக்கு பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறை, அரசு பள்ளி மாணவிகள்,சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி சார்பில் மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களை பள்ளிகொண்ட காவல் ஆய்வாளர் கருணாகரன், பேரூராட்சி துணைத் தலைவர் வசீம் அக்ரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …