காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தேடப்படுகின்ற இடத்தின் பரப்பளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கடலுக்கடியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் விமானத்துடைய கருப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக, சீனாவில் வர்த்தக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நேரத்தில் செய்தியாளர்களிடம் திரு.அப்பாட் கூறினார்.
இந்த விமானத்தின் பாகங்களை இப்போது மொத்தம் 47 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட
குறிப்பாக இரண்டு இடங்களில் மட்டுமே தேடி வருகின்றனர். இவ்விடங்கள் பெர்த் நகருக்கு வட மேற்காக சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன.
பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவியின் பேட்டரிகள் கிட்டத்தட்ட செயலிழந்து போகும் அளவுக்கு வந்துவிட்ட நிலையில், அவை முழுதாக தீர்வதற்கு முன் கருவி கிடக்கின்ற இடம் பற்றி கூடிய அளவு அதிகமான விவரங்களை சேகரிக்க தேடலில் ஈடுபட்டுள்ள அணிகள் விரும்புகின்றன.