கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்த விசாரணை குழுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு

ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது விசாரணை நடத்த தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும்  அந்த குழுவில் யார் இடம் பெறு வார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டு இருந்தது.

ஷிவ்லால் யாதவ் தலை மையில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் வாரிய  கூட்டத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட்டில்  பரிந்துரை செய்வது என்று முடிவு செய் யப்பட்டது.

இந்த குழுவில் இந்திய அணியின்  முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிசாஸ்திரி, கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருக்குமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தால் ஊதியம் பெறும் ரவிசாஸ்திரி விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது என்று  பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்யா வர்மா முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சரத்பவார், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித்மோடி ஆகியோரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேருக்கும்  கிரிக்கெட் வாரியத்தில் ஏதோ ஒரு வகையில்  தொடர்பு இருப்பதால்  எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் சூதாட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்த குழுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

என்.சீனிவாசன், சீனியர் கிரிக்கெட் வீரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது முத்கல் கமிட்டி விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து தனது பதிலை முத்கல் பிற்பகல் 2 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

முத்கல் கமிட்டி கேட்டுக் கொண்டால் புலனாய்வு அமைப்பும் விசாரணைக்கு உதவியாக அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. முத்கல் கமிட்டியிடம் இருக்கும் ஆடியோ பதிவின் சிலவற்றை  என்.சினீவாசனும், கிரிக்கெட் வாரியமும் கேட்க அனுமதிக்கப்படும் என்றும், அதன் விவரங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *