குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மிகவும் விலையுயர்ந்த உரங்கள் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதியில் பரப்புரை செய்த அவர், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் முலாயம்சிங் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் முஸ்லீம், கிறிஸ்டியன் போன்ற சிறுபான்மை இனத்தவரின் வளர்ச்சிக்கு எந்த அரசும் உதவி புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.