தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குனராமநல்லூர் ஊராட்சியில் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றியும் அமைக்கப்படாத சாலை
காந்திபுரம் தெரு பதிமூணாவது வார்டில் வார்டு உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தெருவில் கான்கிரீட் சாலை அமைக்காமல் தாமதப்படுத்துவது ஏன்.?
சாலை அமைக்காமல் உள்ளதால் மழை நேரங்களில் கழிவுநீர் கலந்து சாக்கடை உருவாகி அவ்வழியாக நடக்கும் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது
கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக சாலை வசதி அமைத்து தரும்படி 13 வது வார்டு உறுப்பினர் சார்பாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கிறார்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.?
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி