அறிவுரை அவங்களுக்கு…எங்களுக்கு..

அம்பத்தூர் O. T பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் காய்கறிகனி கடைகள் துணிக்கடைகள் நிறைந்திருக்கும். ஏழு நாட்களிலும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

பண்டிகை காலங்களில் கூடுதலாகவே இருக்கும். மக்கள் கூட்டத்திற்கு இணையாக மாடுகளும் கூட்டமாக சாதர நடமாடும். இதனால் சற்று கலக்கத்தோடு மக்களும், வியாபாரிகளும் இருந்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ரோட்டில் மாடுகள் திரிந்தால் அபராதம் என அறிவித்த சென்னை பெருநகர மாநகராட்சி இந்த இடத்திற்கு விலக்கு அளித்துள்ளனரா என கேள்வி கேட்கும் மக்கள் எங்களுக்கு மட்டும் அறிவுரை போதுமா? ஒரு வேளை மாடுகளுக்கு அறிவுறுத்த வேண்டாமா? ( இது காவல்துறை டிபார்ட்மெண்ட்டில் வராதா போல)என்று கேள்வி எழுப்புகின்றனர்.

விளம்பர அறிவிப்பினை கண்ட பொது ஜனம், ” மாடுகள் இதனை கிழித்து சாப்பிட்டு விட்டு போய்டும்” என நக்கலாக பதிலும் சொன்னது கூடுதல் வேடிக்கையே. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்குள் இதற்கு நிரந்தர தீர்வு காணுங்கள் என மக்களும்,, வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …