வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42 லட்சத்து மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்துகொண்டு கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லூர் ரவி, அகர வரும் ஒன்றிய குழு உறுப்பினர் மனோகர், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி,பள்ளி தலைமை ஆசிரியை திலகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி