சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..

சென்னை, பிப்ரவரி – 24,
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள காளியம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று 24.02.2021 புதன்கிழமை காலை 9.45 மணியளவில் வெகு விமரிசையாக பக்தர்களின் கரகோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்ட பின், மூலவர் அம்பாள் அலங்கார ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்தாள்.

இந் நிகழ்வில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் திரு கரு. நாகராஜன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியரும், பாலகிருஷ்ணன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான P.K. மோகனசுந்தரம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்டம் (மே) செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவியின் செய்தியாளருமான D.மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்டம்(கி) ஊடக பிரிவு செயலாளரும், ஆலய குழு உறுப்பினருமான “கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம் அவர்கள் செய்திருந்தார். இதனை தொடர்ந்து ஆலயத்தின் சார்பாக பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது

செய்தியாக்கம், படங்கள்:
“ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …