பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தால், வங்கிகள் அதனை எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்பதை மதிப்பிடுவதற்கான சோதனையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பலவீனமான பல வங்கிகள் தோல்வி கண்டுள்ளன.
14 வங்கிகள் உடனடியாக பில்லியன் கணக்கான டாலர்கள் புதிய நிதியை தேடுவதுடன், இரு வாரத்துக்குள் தமது பலவீனங்களை திருத்துவதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இப்படியான 4 பலவீனமான வங்கிகளை கூடுதலாக இத்தாலி கொண்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் இப்படியான சோதனையில் தோல்வியடைந்திருக்க வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலும் 10 வங்கிகள் எப்படியோ முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக நிதியை பெற்று விட்டன.