ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா, மற்றும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா தொடர்ச்சி….

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஷேபா குருப் ஆஃப் பள்ளிகள் இணைந்து வழங்கும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ் விழாவில் நம் நெஞ்சில் வாழும் ஐயா H. வசந்தகுமார் அவர்களது திரு உருவப்படம் , நீதியரசர் திரு. வள்ளிநாயகம் அவர்கள், பேராசிரியர் திரு கனகராஜ் அவர்களது முன்னிலையில் திறந்து வைத்தார். தொடர்ந்து , பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு “ஜீனியஸ் – ஷேபா விருது ” வழங்கும் விழா நடைபெற்றது.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான “செயல்சிங்கம்” திரு. Ln. பாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளருமான “நட்பின் மகுடம்” MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு நீதியரசர் திரு.T.N. வள்ளிநாயகம், “கலைமாமணி” திரு. PMJF Ln G. மணிலால், “கல்வி வள்ளல்” போராசிரியர் Dr A . கனகராஜ், “மக்கள் நாயகன்” திரு.விஜய் வசந்த் M.P., தனியார் பள்ளிகளின் பாதுகாவலர், “Dr. K.R.நந்தகுமார், “Gem of India” Dr J.B. விமல், பத்திரிகையாளர்களின் முதல்வர் “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ், “மக்களின் விடிவெள்ளி” திரு. Dr. சு. சேகர் ஆகியோர்‌ கலந்து கொண்டு தங்களது திருக்கரங்களால் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.

இவ் விழாவின் தொகுப்பினை தொய்வில்லாமல் திரு. B.கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில, மாவட்ட இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர், நிர்வாக குழுவினர் சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாக்கம்: “ஜீனியஸ் ” K.சங்கர்

Check Also

காவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் …