தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பாக நான்காம் தூணின் நாயகர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாநிலத் தலைவர் D.S.R. சுபாஷ் தலைமை தாங்க, நெற்றிக்கண் A.S.மணி முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நீதியின் குரல் C.R.பாஸ்கர் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் படத்தை திறந்து வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக, சமூக போராளி டிராபிக் ராமசாமி, கவிஞர்.பொன்னடியான், கே.ராஜன், கேப்டன் டிவி நாராயணன், CMPA V.வெங்கட் ராஜு, FM நாகப்பன், கவிஞர் E.பதுருதீன், ஆல் இந்திய பிரஸ் தலைவர் வேல்முருகன், காந்தியவாதி சசி பெருமாள், மிடியா பாஸ்கர், திருமதி டாக்டர் சுஜாதா, இயக்குனர் ஜாபர், PRO. S. செல்வரகு, தஞ்சை தமிழ்பித்தன், மற்றும் மூத்த பத்திரிககயாளர்கள் ஜெயராமன், குணசீலன், சிட்டி போஸ்ட் A.V.சங்கர், மற்றும் TUJ முக்கிய நிர்வாகிகள் கழுகு K.ராஜேந்திரன் சென்னை V.ராமலிங்கம், லயன். C.பரமேஸ்வரன், விநாயகமூர்த்தி, லயன்.முருகேஷ், பல்லாவரம் D.அல்லா பகேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.இறுதியில் சென்னை நண்பன் அபூபக்கர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- சென்னையின் மையப் பகுதியில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு முழு உருவ சிலை வைப்பது,
- அவருடைய வாழ்கை குறிப்பை, பாடநூலில் இடம் பெறச் செய்வது,
- அவருடைய பிறந்தநாள், மற்றும் நினைவு நாளை, அரசு விழாவாக எடுப்பது மற்றும் பத்திரிக்கையாளர் தினமாக அறிவிப்பது.