பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் பெருமைப்படும் வண்ணம் தன் இறுதி காலம் வரை தன்னலம் கருதாமல் வாழ்ந்தவர் தான் திரு. டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள்.

அவருடைய 75 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் மாநில அமைப்புச் செயலாளருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் நம்மிடம் பேசுகையில் கூறினார்.

கொரோனா காலக்கட்டத்திலும் நமது சங்கம் ஐயாவின் ஆசிகளோடு, அவர் விட்டு சென்ற பணியினை வேகமாகவும், விவேகமாகவும் செய்து வரும் அவரது புதல்வரும், இந்திய யூனியன் ஜர்னலிஸ்ட் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான திரு. D.S.R. சுபாஷ் அவர்களோடு இணைந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றார். தொடர்ந்து ஐயாவின் அலங்கரிப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு ரமேஷ்கண்ணா அவர்களிடம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகையாளரும்,
பத்திரிகையாளர்களின் ஓய்வு ஊதிய குழு, தமிழ்நாடு அரசு உறுப்பினருமான திரு. A.B. மோகன், மூத்த பத்திரிகையாளரும், ஆம் ஆத்மி கட்சி தமிழக பொறுப்பாளருமான திரு. S.A. வசீகரன் மற்றும் ஏராளமான பத்திரிகை நண்பர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாக்கம் & புகைப்படங்கள்:
” கிங்மேக்கர்” Ln B.திரு. செல்வம்
சிறப்பாசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் & ஜீனியஸ் டீவி

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …