டெங்குவை அடித்து விரட்ட பொதுமக்களுக்கு சகாயமாக “கசாயம்” தந்த PPFA

PPFA திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், தற்போது வேகமாக பொதுமக்களிடம் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக ” நிலவேம்பு” கஷாயம், 29.09.19 காலை 8.30 மணியளவில் மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. வில், மாவட்ட தலைவர் திரு.S. இதாயாத்துல்லாஹ் அவர்களது ஏற்பாட்டில் எம்.எம்.டிஏ. 3 வது மெயின் சாலையில் அமைந்துள்ள பள்ளி வாசல் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln L. பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் திரு. Ln C.H.சண்முகம் அவர்களும் ( President, Lions Club of Royapuram Heritage) பொது மக்களுக்கு வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் திரு. A. சதீஸ்குமார், சென்னை மாநகர காவல்துறை M 2 மணலி காவல்துறை அதிகாரி திரு. இராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்‌.

இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் திரு. A. செய்யது சுலைமான், துணை செயலாளர் திரு. V. சேகர், திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு. சுகேல், செயலாளர் திரு. ரமேஷ், துணை செயலாளர் திரு.MD அஹமது ஷரீப், துணை தலைவர் திரு. கருணாகரன், துணை செயலாளர் திரு. சாகுல் அமீது, உறுப்பினர்கள் திரு. மஜிவுல்லா உசேன், திரு. D.M. கோரி, திரு. முகமது ஹனிபா, திரு. முகமது அலி இவர்களோடு PPFA மாநில செயல் தலைவர் திரு. T.J. ஆனந்தன், தலைமை நிலைய செயலாளர் ” ஜீனியஸ்” K. சங்கர், மாநில இளைஞர் அணி தலைவர் திரு. Ln.L. வேலாயுதம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு. சத்யநாராயணன், மாநில கண்காணிப்பு குழு தலைவர் திரு. ” மெட்ரோமேன்” S. அன்பு, மாநில செயற்குழு உறுப்பினர் திரு. S.M. பாஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர.

இந்நிகழ்வில் சுமார் 509 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்தை பருகி பயன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு&செய்தியாக்கம்
” ஜீனியஸ்” K. சங்கர்
படத் தொகுப்பு : அமுரா