தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 ரூபாய்க்கும், 130 ரூபாய்க்கு விற்பனையான உளுந்தம் பருப்பு 150 ரூபாய்க்கும், 70-ருபாய்க்கு விற்பனையான கடலைப் பருப்பு 85 ருபாய்க்கும் விற்கப்படுகிறது.

Check Also

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, …