Tag Archives: இந்தியா

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, தைரியத்துடனும், உறுதியுடனும் நாட்டிற்காக வீரர்கள் உழைத்து வரும், விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் வான்வழியாக நம்மை பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் முன்னின்று செயல்படுவதாக மோடி பெருமை கூறியுள்ளார். I salute our air force personnel on Air Force Day. They have always …

மேலும் படிக்க

தொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் …

மேலும் படிக்க

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; …

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 …

மேலும் படிக்க

தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம்

உலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்கொலைத் தலைநகராக சென்னை மாறி வருகிறது. இளம் வயதினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் லட்சுமி. …

மேலும் படிக்க

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் தேசத்துக்கு எதிராக போர் புரிந்ததாக குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மரண தண்டனை அளிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆணையம் இந்திய மத்திய அரசிடம் திங்கட்கிழமை தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அளித்தது. தமது இந்தப் பரிந்துரைகள் சமூகத்தில் அறிவுபூர்வமான, கொள்கை ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதன் …

மேலும் படிக்க

நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார்: ராம்ஜெத்மலானி வருத்தம்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 78வது நாளாக நீடிக்கிறது. ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்த நாட்டு மக்களை கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர …

மேலும் படிக்க

ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல், தமிழ்நாட்டில் 12 நகரங்கள்

ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் இன்று வெளியிட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் அமைந்துள்ளது. மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் காஷ்மீரில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்களின் பெயர்களை அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் 98 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை …

மேலும் படிக்க

குஜராத்தில் படேல் சமூகத்தினர் போராட்டத்தில் வன்முறை: பலி 9 ஆக அதிகரிப்பு

இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 …

மேலும் படிக்க

முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் குறைந்திருக்கிறது

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தி இந்து நாளேடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் …

மேலும் படிக்க