தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா அடையார், இந்திரா நகர், இளைஞர் விடுதியில் (15.08.2015) அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ) சார்பாக நடைபெற்றது.
பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த தோழர் தராசு ஷியாம் அவர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இலவச மருத்துவ முகாம் தொடக்கி வைத்து பேசிய டாக்டர் C.M.K.ரெட்டி பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சங்க தோழர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து சுதந்திரதின விழாவில் சென்னை மாவட்ட ஒருங்கினைப்பாளர் G. மேகராஜ், தோழர் கொழுமம் V.தாமோதரன் அவர்களை தலைமை ஏற்று நடத்த சொன்னார் அதனை தலைமை நிலைய செயலர் D. அல்லாபகேஷ் வழிமொழிந்தார் திண்டுகல் M. ராமகிருஷ்ணன், A.K.பிரபாகரன் முன்னிலைவகித்தனர். கடலூர் K.ரமேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார்.
நமது மாநிலத் தலைவர் D.S.R.சுபாஷ் அவர்கள் பேசுகையில் நிறுவனர் D.S.ரவீந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிறகு பல போராட்டங்கள் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தற்போது தோழர் தராசு ஷியாம் அவர்கள் எங்களை வழி நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார்.
தோழர் தராசு ஷியாம் அவர்கள் பேசும்போது பத்திரிகையாளர்கள் எவ்வாறு தங்கள் பணியை செய்ய வேண்டும் ஆலோசனை வழங்கினார். மற்றும் தன்னுடைய அனுபவத்தை சங்க தோழர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.
அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாசன் ஏழை மக்களுக்கு புடவை மற்றும் வேட்டி, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.
இறுதியில் தலைமை நிலைய செயலர் பல்லாவரம் D. அல்லா பகேஷ் அவர்கள் இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்புரையாற்றிய அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூறினார்.
இந்த விழாவை தென்சென்னை மாவட்ட தலைவர் தோழர் . ஜனார்த்தனன் துணை தலைவர் தோழர்.நமது நகரம் சரவணன் செயலாளர் தோழர்.நாகராஜ் பொருளாளர் தோழர்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
200 மேற்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.