நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். லாரன்ஸின் பிறந்த நாளான இன்று இதற்கான வேலைகள் துவங்கிவிட்டன.
இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது. தாயின் மனதே ஒரு கோயில் தான் அந்த தாய்க்கு அந்த தாய் வாழும் போதே கோயில் கட்டி பெருமை படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான்.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன். என் தாய்க்கு மட்டும்மல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன். ஆப்படிப்பட்ட அந்த தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமா அடுத்த வருடம் எனது பிறந்தநாளன இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன் என்றார் ராகவா லாரன்ஸ்.