அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : தென்சென்னை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடந்த ஒன்றரை மாதகால, தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை என்றும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சீர்கேடுகளால் ஏற்பட்ட தமது உள்ளக் குமுறல்களையே வெளிப்படுத்தியதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
உணவு தானிய உற்பத்தியில் குஜராத் 88.74% மெட்ரிக் டன் ஆனால் தமிழகத்தில் 101.57%மெட்ரிக் டன் அதிகமாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் மகளிருக்கான குற்றங்கள் 65% அதிகம் உள்ளது என தமிழகத்தில் 29% குறைந்துள்ளது என தெரிவித்தார்.குஜராத்தின் மோடியை விட தமிழகத்தின் இந்த லேடி தான் சிறந்தவர் என்று கூறினார். காங்கிரசுக்கு ஆதரவான போக்கை திமுக கொண்டிருப்பதாகவும் கார் இறக்குமதி வழக்கிற்க்காக காங்கிரசை திமுக விமர்ச்னம் செய்யவில்லை. வறுமைகோட்டிற்க்கு கீழ் இருப்போர் குஜராத்தில்16.6% விட தமிழகத்தில் 11.3% தான் உள்ளனர்.
குஜராத் வளர்ந்துள்ளதாக கூறுவது தவறு என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர் மோடி அல்ல. இந்த லேடி தான். சிறந்த நிர்வாகத்தை அளிப்பவர் மோடி அல்ல. இந்த லேடி தான். எனக்கு எல்லாம் நீங்கள் தான் உங்களால் நான். உங்களுக்காகவே நான்.எனக்கு தன்னலம் கிடையாது. எல்லாம் உங்கள் நலன் தான். தமிழக நலன் தான். தமிழக மக்களின் நலன் தான் என் நலம். தமிழக மக்கள் தான் என் மக்கள் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.