இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் உலகிற்கே எரிவாயு விநியோகத்தை நிறுத்த போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வந்தால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழல் உண்டாகும். கத்தாரை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவே எடுக்குமோ என அஞ்சப்படுகிறது.
இவர்களும் இணைந்தால் தட்டுப்பாட்டுடன் கடுமையான விலை உயர்வு ஏற்படலாம். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு முஸ்லீம் நாடுகள் ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்பட்டால் உலகப் போர் மூளுமா என்பது தான் மக்கள் முன் எழும் அச்சம்?