சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 நாட்களில் 5.19 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை சரிந்திருப்பதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த விலை குறைப்பு அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15–ந்தேதி வாக்கில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.