போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதனால் அனைத்து வாகனங்களையும் சோதனையிட ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை தொகுதியின் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், மாவட்டம் முழுவதும் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. பணம், பொருள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
இதையடுத்து போலீஸ் வாகனங்களையும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி