கொரோனா வைரஸ் பரவிய நிலையில், அது மேற்கொண்டு பரவாமல் தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் உணவு கிடைக்காமல் மக்கள் படும் துயரத்தினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தென் சென்னை மாவட்ட தலைவர் . ” பூங்கா நகர்” திரு. விஜயன், மாவட்ட செயலாளர் ” பூங்கா நகர்” திரு. ராஜன் ஆகியோர், சென்னை சென்டரல் பகுதியில் வசித்து வரும் சாலையோர மக்களின் பசிப் பிணியினை போக்கிடும் வண்ணம் கடந்த பத்து நாட்களாக வழங்கி வருகின்றனர்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” கே. சங்கர்
ஒளிப்பதிவு: ஜீனியஸ் டீம்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி



