மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இன்றைய களப்பணி…

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி
இன்று 1104.2020 சனிக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து…

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில், புது வண்ணாராப்பேட்டை செரியன் நகர், சுற்று வட்டாரத்தில் நேரடியாக சென்று உணவளித்தனர்.

இவர்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. Ln V.K. ராமசந்திரன், திரு. MJF Ln Dr M. நாகராஜன் வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து களப்பணி செய்தனர்.

இணைந்த கைகள்

தொடர்ந்து பங்களிப்பினை அளித்து வரும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், களப்பணியில் இணைந்து செயலாற்றி வருகின்றவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒளிப்பதிவு: G.பாலா‌ஜி
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …