இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் (இஸ்ரோ) சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் கடந்த மாதம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இன்றுடன் ஒருமாத காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மங்கல்யான் விண்கலம் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மங்கள்யான் விண்கலம் அனுப்பப்பட்டது.
இறுதியாக செப்டம்பர் 24 ம் தேதியன்று, மங்கல்யான் செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது.
கூகுள் கொண்டாட்டம்
இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்குள் நுழைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தை வடிவமைத்துள்ளது.
இந்தியாவின் இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் விதமாக கூகுள் முகப்பு பக்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.