பிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!

நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி” யில் நடைபெற்ற “அறிவியல் கண்காட்சி” நடைபெர்றது.

இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியே‌ஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, பள்ளி தாளாளர்&செயலாளருமான ” Gem of India” திரு. விமல் அவர்கள் பூங்கொத்துடன் கெளரவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய தலைவர் அவர்கள் ” இந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் பங்களிப்பில் நடைபெறுகின்ற இக் கண்காட்சிக்கு எனது சகோதரர் அவர்களின் (விமல் அவர்கள்) முழு பங்களிப்பில் பெருமை கொள்வது மட்டுமல்லாமல் அவரது அசராத உழைப்பில் கல்லூரியும் தொடங்கி தன் கல்வி சேவையினை விரிவுப்படுத்த கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அறிவியல் கண்காட்சி யினை பார்த்த போது இப் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள உழைப்பு வீண் போகாத வண்ணம் ஒவ்வொரு மாணவர்களின் திறமையும் சோடை போகாது என்பதை உணர்ந்தோம்.

இந்நிகழ்ச்சியில் திரு விமல் அவர்களின் தாயாரும், பள்ளி நிறுவனருமான ஜெயபாய் S. ஜோசப், திரு. Dr. P.சாராநாத், (Committee Member, Shebha Group of Schools), Dr.S. ஜெர்மையா கிங்ஸ்லி( Committee Member. Shebha Group of Schools), PPFA தலைமை நிலைய செயலாளர் ” ஜீனியஸ்” K. சங்கர், முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி B. லஷ்மி நாராயணன், மாநில கண்காணிப்பு செயலாளர் திரு.P. K. மோகனசுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக் கண்காட்சியினை முழுவதையும் சுற்றி பார்த்த போது நம் மனம் சொன்னது தங்களிடம் கொட்டிக் கிடக்கும் “அறிவை” திறமையான வகையில் பயன்படுத்தி “அவியலாக” நம் முன் காட்டிய அப் பள்ளி மாணவ/ வியர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.

செய்தியாக்கம்& படங்கள்:” ஜீனியஸ்”K. சங்கர்
படத் தொகுப்பு: அமுரா

Check Also

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து …