காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் போன விமானத்தோடு தொடர்புடையதா என்பதும் தெரியவில்லை.
தேடுதலை ஒருங்கிணைத்து நடத்தி வரும் ஆஸ்திரேலியாவும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி