ரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் வலுசேர்க்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த், மோடியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் என்றார். நரேந்திர மோடி வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்றும் கூறினார். இதற்கிடையே ரஜினியை சந்தித்த நரேந்திர மோடி, தமிழக பாஜ கூட்டணியில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் தேமுதிகவை மையமாக கொண்டே மூன்றாவது அணியை உருவாக்கி விட்டு, ஆதரவுக்காக வேறொரு நடிகரை சந்திப்பதா என தேமுதிக கட்சியினர் குமுறலை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் பாஜ கூட்டணியில் மீண்டும் சிறு சலசலப்பு உருவானது.
இத்தகவலை பாஜ நிர்வாகிகள் மோடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் விஜயகாந்தை நேற்று செல்போனில் தொடர்பு கொண்ட நரேந்திர மோடி அவருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரசாரம் வெற்றி அடையவும் வாழ்த்து கூறினார். இதையடுத்தே தேமுதிகவினர் சமாதானம் அடைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடியுடன் விஜயகாந்தும் பங்கேற்கிறார்.