வேலூரில் மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்தது!

வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்ற மரத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென முறிந்து கீழே விழுந்தது.

அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அதில் சிக்கிக் கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அடியில் சிக்கிக்கொண்ட இரு வாகனத்தையும் மீட்டனர். சாலையில் திடீரென மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …