1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி.
கொழும்பு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 386 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் 1-0 என்ற கணக்கில் தொடரை 1993 ல் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோலி தலைமையில் 2-1 என்று வெற்றி பெற்றுள்ளது.
ஆட்ட நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.