சென்னை டிசம்பர் 27:
ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மறைந்த வடசென்னை மக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி நடைபெற்றது.
இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நடிகர் கே ராஜன், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் மற்றும் தொழிலதிபர் தயாளன், லயன்ஸ் கிளப் L. பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரனின் திருவுருவப்படத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி

