ஐபிஎல் கிரிக்கெட்டின் 7வது சீசன் கோலாகலமாக 16ந்தேதி துவங்குகிறது. இந்தியாவில் தேர்தல் நடப்பதால் இரண்டு கட்டமாக போட்டிகள் நடக்கின்றன. அதாவது முதல் கட்ட போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் நடக்கின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பி யன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர் கொள்கிறது.
முதல் 20 ஆட்டங்கள் இந்த நாடுகளில் நடக்கிறது. 2வது கட்டமாக 21வது ஆட்டத்தில் இருந்து இறுதி ஆட்டம் வரை இந்தியாவில் நடக்கின்றன. மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. ஜூன் 1 ம் தேதி மும்பையில் இறுதி ஆட்டம் நடக்கிறது.
ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி