உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடப்பதற்கு இரு மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பிரேஸிலின் நகரான ரியோ டி ஜெனிரோவில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உள்ளூர் நபர் ஒருவரை போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்று தவறுதலாக நினைத்து அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக கருதி, போலீஸாருக்கும், நகர வாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
அந்த நகருக்கு அருகே, கார்களையும், டயர்களை எரித்ததை அடுத்து, கொப்பகபானா என்னும் சுற்றுலாஸ்தலத்தின் முக்கிய வீதிகள் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இந்த நேரத்தில் பிரேசிலில் கலவரம் மூண்டுள்ளது.