சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருப்பதா மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 105 பாரன்ஹீட்டும், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடியில் 95 டிகிரி பாரன்ஹீட்டும், கன்னியாகுமரியில் 93.2 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தாலும் ஈரப்பதம் மிக அதிகமாக இருப்பதால் வெயிலின் கடுமை நன்றாக தெரிகிறது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. உள்மாவட்டங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.