இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார். அவரது நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா ஆவார்.
வழக்கறிஞரான வர்மா அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பணியாற்றியுள்ளார்.
இந்திய ராஜீய அதிகாரி ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் தொடர்பில் விசா மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற ஆண்டு நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான ராஜீய உறவுகள் சிக்கல் அடைந்திருந்தன.
இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் செல்லவுள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி