‘கோலி சோடா’ படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார். இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.
பவர்ஸ்டார் சீனிவாசன் கூறும் போது, கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் 3 நாட்கள் தான் என்னை வைத்து படப்பிடிப்பு நடித்தினார்கள்.
கொஞ்சம் தான் பணம் தந்தார்கள். பேசியபடி தராமல் ஏமாற்றி விட்டார்கள். நான் கேட்ட போது தரமுடியாது என மிரட்டுகிறார்கள் என்றார்.
இதற்கு கோலி சோடா படத்தின் டைரக்டரும் தாயாரிப்பாளருமான விஜய் மில்டன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
கோலி சோடா படத்தில் நடிக்க பவர்ஸ்டார் சீனிவாசன் 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். ஆனால் 3 நாட்கள் தான் படப்பிடிப்புக்கு வந்தார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வரும்படி அழைத்தோம். ஆனால் மறுத்து விட்டார். இதனால் வேறு ஒருவரை வைத்து பவர் ஸ்டாருக்கு டப்பிங் பேச வைத்தோம். அவர் நடித்த 3 நாட்களுக்கான சம்பளத்தை கொடுத்து விட்டோம். நடிக்காத நாட்களுக்கும் சம்பளம் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும் என்றார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி