மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை: வீரப்ப மொய்லி

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய வீரப்ப மொய்லி; மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு  ஆதார் அட்டை கணக்கு இணைப்பை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.

மேலும், நேரடி மானிய திட்டத்தைப் பொறுத்தவரை மானியம் இல்லாத சிலிண்டர்கள் விநியோகத்தில் ஆதார் கணக்கு இணைப்பை நீக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றும் மானிய விலை சிலிண்டர்களை இனி ஆதார் அட்டையில்லாமல் பெறலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், முன்னதாக வங்கிகளில் சிலிண்டருக்கான மானியம் 435 ரூபாய் செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது மானியம் 700 ரூபாயாக உயர்ந்துள்ளதால் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று மொய்லி தெரிவித்துள்ளார்.  மானிய விலை சிலிண்டர் விலை உயர்வு செய்யப்படவில்லை என்பதை மொய்லி குறிப்பிட்டுள்ளார்.

ஒரே முகவரியில் இரண்டு சிலிண்டர்கள் பெறப்படும் நிலையில், வீட்டில் தனித்தனி சமையலறை அல்லது வீடுகள் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்தால் அனுமதி அளிக்கப்படும் என்று மொய்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.