சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருதய நோய், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, ரத்தகுழாய் அறுவை சிகிச்சை, நரம்பு அறுவை சிகிச்சை, கை மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகிய உயர்சிகிச்சை முறைகள் உட்பட பல்வேறு சிறப்பு உயர் சிகிச்சை முறைகள் வரவுள்ளன.
இதற்கு தேவையான நவீன கருவிகளான ‘‘பைபிளேன் கார்டியாக் கேத் லேப்’’, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், மல்டி சிலைஸ் சிடி ஸ்கேன், டிஜிட்டல் ரேடியோகிராபி, மொபைல் டிஜிட்டல் எக்ஸ்ரே, நவீன அறுவை அரங்கங்கள், டாக்டர் அறைகள், மருத்துவ கிடங்கு, பரிசோதனை கூடம், நர்சு அறைகள், வார்டு, கழிவறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.