வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் உள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சோனியா, ராகுல் இருவரும் கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன். கருப்புபண மீட்புக் குழுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சோனியா, ராகுல் தவிர 8 முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.