ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நாடெங்கிலும் ஒன்பதரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது.
கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், ‘சிசாட்’ என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிதாகவும் மற்ற மொழி மாணவர்களுக்கு கடினமானதாகவும் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனை சுட்டிக்காட்டி நடைபெற்ற போராட்டங்கள் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இதனால், தங்களுக்கு தேர்வு எழுத மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என, பல தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2011ல் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும், இந்த முறையும் தேர்வெழுத மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.