கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையை ஏற்று, இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த நோட்டுகளில் 7 புதிய அம்சங்கள் இடம்பெறும் என்றும், முதற்கட்டமாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதத்திற்குள் மற்ற நோட்டுகளும் புழக்கத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.