சென்னை, இராயபுரம், கல்மண்டபம், சோமு முதல் சந்தில் அமைந்துள்ள ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக அம்பாள் வீதி உலா 27-04-19 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.
அம்பாள் இராயபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். தொடர்ந்து 28-04-19 ஞாயிறு மாலை 7 மணியளவில் சுமார் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி அம்பாளின் ஆசிகளோடு தீ மிதித்து தங்கள் பிராத்தனையை நிறைவேற்றினர்.
ஔிப்பதிவு, படத்தொகுப்பு வே. கந்தவேல் தயாரிப்பு “நட்பின் மகுடம்” திரு. MJF Dr Ln லி. பரமேஸ்வரன் இயக்கம் கே. சங்கர், ஜீனியஸ் டீவி.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி