தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பத்திரிகையாளர்களும் இரவு, பகல் பாராது பம்பரமாக சுழன்று களப்பணி செய்து வருகின்றனர்.
அத்தகைய பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரணம் தொகை தர வேண்டும் என பத்திரிகையாளர்களின் சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ரூ.3000/- நிவாரணமாக தமிழக முதல்வர் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டி.யூ.ஜெ. சார்பில் மாநில தலைவரும், ஐ.ஜே.யு. வின் தேசிய பொதுச் செயலாளருமான திரு. D.S.R. சுபாஷ், மாநில இணை செயலாளரும், தேசிய குழு உறுப்பினருமான ” கழுகு” கே. ராஜேந்திரன், மாநில அமைப்புச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியர் திரு. Ln A. G. அசோக்குமார், வடசென்னை மாவட்ட தலைவர் திரு. பிரேம்குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.லட்சுமணன், மூத்த பத்திரிகையாளர் திரு. அப்துல் லத்தீப் ஆகியோர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு கூடுதல் செயலாளர் திரு .முனைவர் பொ. சங்கர். இ.ஆ.ப., அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் வருகைத் தந்த பத்திரிகையாளர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது.