காவல்துறைக்கு பாதுகாப்பு வசதிகள் அளிக்க வேண்டும்… உயர்நீதிமன்றம் உத்தரவு…

காவல்துறையினருக்கு முழு உடல் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் போலீஸ் மற்றும் சிறை துறையில் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. இவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது போன்ற மற்றொரு வழக்கில், கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முகத்தினை முழுவதும் மறைக்கும் ” ஷீல்டு கவசம்” வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இது பற்றி அரசு தரப்பில் 54,280 காவல்துறையினருக்கு முகத்தினை முழுவதும் மறைக்கும் ” ஷீல்டு கவர்” போன்ற கவசம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல மாநகராட்சி பகுதிகளில், தூய்மை பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதிகள் தங்களது உத்தரவில், காவல்துறையின் அனைத்து பிரிவினரின் பாதுகாப்பினையும் அந்தந்த மாவட்ட எஸ்.பிக்கள் உறுதி செய்ய வேண்டும். மற்றும் அனைத்து நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் முக கவசம் அணிவதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும் என கூறி வழக்கினை முடித்து வைத்தனர்.

செய்தியாக்கம்:
” நட்பின் மகுடம்”
திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன்
முதன்மை ஆசிரியர்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …