இன்று தனியார் பள்ளிகள் கல்வியை மட்டுமே சிறந்த முறையில் தருவது மட்டுமல்லாது, தங்களது பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வன்ணம் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் திருவொற்றியூரில் உள்ள செயிண்ட் அந்தோணி மேல்நிலைப் பள்ளி நடத்திய ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ஆர். பிச்சை, மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் மாநில தலைவர், டி.எஸ்.ஆர். சுபாஷ், வழக்கறிஞர், ஏ. வெங்கடேசன், கழுகு ராஜேந்திரன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணை ஆசிரியர் லயன் லி. பரமேஸ்வரன், செயிண்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எம்.ஜெ. மார்ட்டின் கென்னடி மற்றும் பள்ளி தாளாளர்கள், இவர்களுடன் இப்பள்ளி மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முத்தாய்ப்பாக, சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் விதமாக பள்ளி மானவ, மாணவியர்களின் வித்தியாசமான நடனத்துடன் மேடைக்கு அழைத்துச் சென்றது வியக்கத்தக்கது.
ஆர்.பிச்சை – மெட்ரிக் பள்ளி இயக்குனர் பேசுகையில், இன்றைக்கு கல்விக்காக அரசு பலவிதமான உதவிகள் செய்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு கல்வியை மட்டும் பிரதானமாக தருவது மட்டுமல்லாமது, அவர்களை உற்சாகப்படுத்தும் இது போன்ற திறமைகளை வெளிப்படுத்துவதற்கு, உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் பேசுகையில், எங்களை எல்லாம் வரவேற்கும் போது அக்குழந்தைகளின் நடனத்தில், நளினத்தில்தான் எத்தனை உற்சாகம். இத்தகைய ஆனந்தமே. தாங்கள் பயிலும் கல்விக்கும் உத்வேகம் தரும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் மாநில தலைவர், டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்கள் பேசும் போது, இத்தகைய ஆண்டு விழாவை பார்க்கிற போது நாம் படிக்கும் காலம்தான் நினைவுக்கு வருவதாகவும், இவர்களின் திற்மைகளை பார்ப்பதற்காகவே ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோர்களையும் மாணவ, மாணவியர்கள் ஏமாற்றாமல் நாங்களும் நிகழ்ச்சிகளை பார்க்க ஆசைப்படுகிறோம் என குறிப்பிட்டார்.
ஆம், ஒரு பள்ளி ஆண்டு விழாவை எந்த விதத்தில் வேகமாக நடத்திட முடியும் என்பதை மிகவும் நேர்த்தியாக நடத்திக் காட்டிய இப்பள்ளியின் தாளாளர் திரு. கேப்ரியேல் ரவி அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாதுதான்
டி.ஜே. ஆனந்தன்