தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு, தென்காசி மாவட்டம் குற்றாலம், காசிமேஜர்புரம், முருகன் மஹாலில், 20.02.2021, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு.D S R சுபாஷ் அவர்கள் தலைமை வகித்திட, மாநில பொதுச் செயலாளர் திரு.கு. வெங்கட்ராமன், மாநில பொருளாளர் திரு. ஏ.சேவியர் முன்னிலை வகிக்க, தென்காசி மாவட்ட தலைவர் திரு. மு. முத்துசாமி வரவேற்புரையை நிகழ்த்தினார்.
மாநாட்டில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, கவிஞர் TSK மயூரி (பெருந்தலைவர் காமராஜர் பேத்தி) குத்து விளக்கேற்றிட மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்கியது.
முன்னதாக தமிழக செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ அவர்களின் திருக்கரங்களால் விபத்துக் காப்பீடு பாலிசி பத்திரம் வழங்கப்பட்டது.
மாநாட்டில் மறைந்தும் நம் நினைவில் வாழும் பத்திரிகையாளர்களின் போராளி ஐயா D.S.ரவீந்திரதாஸ் அவர்களின் பவளவிழா படத்தினை திரு. பில்வந்தர் சிங் ஜம்மு (அகில இந்திய பொதுச்செயலாளர் மற்றும் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் – பஞ்சாப்,ஜம்மு & காஷ்மீர்) முன்னிலையில் திரு. K.சீனிவாஸ் ரெட்டி ( அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தலைவர்- புதுடில்லி, முன்னாள் பிரஸ் கவுன்சில் & உறுப்பினர்) அவர்கள் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களின் உரையுடன், முத்தாய்ப்பாக தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில தலைவர் போராசிரியர் திரு. Dr.J.கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் திரு. Dr K.R.நந்தகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந் நிகழ்வில் திரு. கனகராஜ் அவர்கள் பேசுகையில், பத்திரிகையாளர்களின் உழைப்பும், வாழ்வாதாரம், மற்றும் உடல்நலமும் முக்கியமாக பேணி காக்கப்பட வேண்டும் என கூறியது மட்டுமல்லாமல் தங்களது ஜெயா அறக்கட்டளையின் மூலம் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளிப்பதாக எதிர்பாரமல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் நிறுவனரும், மறைந்தும் நம் நினைவில் வாழும் “பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா D.S.ரவீந்திரதாஸ் அவர்களது அஞ்சல் தபால்தலை வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் திரு. S.A.N. வசீகரகன்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு திருச்சி வேலுசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் ஆகியோரது அனல் பறந்த உரை மாநாட்டின் நிறைவையும் உற்சாகத்தினையும் தந்தது.
இம் மாநாட்டில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியர் “ஜீனியஸ்” சங்கர், ஜீனியஸ் டீவி பொறுப்பாசிரியர் திரு அ. முகமது ராசித், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியர் திரு.I. கேசவன், சிறப்பு செய்தியாளர் திரு P.K. மோகனசுந்தரம், செய்தியாளர்கள் திரு.E.மகேஷ்வரன், திரு J. வாசுதாசன்,திரு. S. சேகர், திரு B. தர்மலிங்கம், ” வீரத்தமிழன்” ஆசிரியர் திரு. R. விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இம் மாநாடு நடைபெற்ற மண்டபத்தின் வாயில் முகப்பில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வட சென்னை மாவட்ட துணை செயலாளருமான கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம் M.A., அவர்களும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்ட (மே) செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு D. மகேந்திரன் அவர்களும் இணைந்து பிரமிப்பான வரவேற்பு பேனரையும், நகரினை சுற்றி போஸ்டரையும் ஒட்டி , மிரட்டலான, அசத்தலான பணியினை செய்து மாநாட்டில் கலந்துக் கொண்டோருக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியினை தந்தது கூடுதல் சிறப்பு அம்சமே.
ஒளிப்பதிவு, படங்கள், செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு: அமுரா