பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலாக வழக்குத் தொடுக்கப்பட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வந்துள்ளதை தங்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக திரு. KR நந்தகுமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்வி கட்டண வழக்கு இன்று 30.07.20121 சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி. கிருஷ்ணகுமார் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின் சாராம்சங்கள்:
- கல்வி கட்டண 85 % தனியார் பள்ளிகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதனை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப 6 தவணைகளாக 01. பிப்ரவரி 2022க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது.
- பெற்றோர்களுக்கு வருமானம் குறைவாக இருக்கும் பட்சத்தில் 75% கல்வி கட்டணம் 2019- 20 இன் அடிப்படையில் 21… 22 க்கு பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
- வேலையின்மை மற்றும் இன்ன பிற பொருளாதார நிலை காரணமாககல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளவர்கள் சலுகை பெற விரும்புபவர்கள்உரிய தனியார் பள்ளிக்கு விண்ணப்பித்து அதன் மூலமாக பேசி பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- கட்டண பாக்கி 2019 -2020, 2020- 2021 உள்ளவர்கள் அதையும் தவணை முறையில் தனியார் பள்ளிகள் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட எந்த விதமான பள்ளி கட்டணங்களும் திரும்ப வழங்க (Refund) செய்ய இயலாது என்பதையும் தெரிவிக்கப்பட்டது
- எக்காரணம் கொண்டும் Online Class இருந்து மாணவர்கள் நீக்க கூடாது என்பதும் திட்டவட்டமாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி மாணவர் நீக்கம் குறித்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
- Concessions வேண்டி உள்ளவர்கள் குறித்து எவ்வகையான concession கொடுக்கப்பட வேண்டும் என்பதை மாவட்டக் கல்வி அலுவலர் 30 நாட்களுக்குள் இறுதி முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- ஒரு சிறப்பு அனுமதியோடு தமிழக அரசு எந்த தனியார் பள்ளிகளில் RTE 25% மாணவர்கள் நிரப்பப்படாமல் (vacancy) இருக்கிறதோ அவற்றிற்கு உரிய கல்வி கட்டணத்தை அரசு வழங்கலாம் என்ற யோசனையும் நீதிபதி அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
- சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களது website மற்றும் பள்ளிகளில் கட்டணத்தை display செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
- கல்வி கட்டண நிர்ணய குழு உள்ள பணியாளருக்கான vacancies உடனடியாக இரண்டு வாரத்திற்குள் நிரப்பப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது .
- கல்வி கட்டணம் குறித்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை அரசாணை உடனடியாக தீர்ப்புக்கு இணங்க மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
- பள்ளிகளை விட்டு மாறும் T.C தேவையில்லை என்ற ஏற்கனவே அரசு அறிவித்துஉள்ளது. மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதால், பள்ளியை விட்டும் வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் , ஏற்கனவே பயிலும் பள்ளிக்கு சென்று தங்கள் பள்ளியை விட்டு போகிறோம் எந்த பள்ளியில் சேரப் போகிறோம் என்பதையும் தெரியப்படுத்த வேண்டும் என மாண்புமிகு நீதிபதிஅவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.